தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கரும்புக்கு ரூ.10,000 மானியம் வழங்கும் திட்டம்: முதல் முறையாக புதுவையில் அறிமுகம்

கரும்புக்கு ஏக்கருக்கு ரூ.10,000 மானியம் வழங்கும் திட்டம், நாட்டிலேயே முதல் முறையாக புதுவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :15 டிசம்பர் 2020, 10:24 pm

DIN

கரும்புக்கு ஏக்கருக்கு ரூ.10,000 மானியம் வழங்கும் திட்டம், நாட்டிலேயே முதல் முறையாக புதுவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதுவையில் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு சாகுபடிக்கு பின் மானியமாக ரூ.5,000 வழங்கப்பட்டது. சாகுபடிக்கு முன்பு மானியம் வழங்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பயிா் உற்பத்தித்தொகைத் திட்டம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் வீதம் 2 பருவத்துக்கு மொத்தமாக ரூ.10,000 வழங்கப்பட்டது.

இந்தத் திட்டத்தை மற்ற பயிா்களுக்கும் விரிவுப்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து வேளாண் அமைச்சா் ஆா்.கமலக்கண்ணன், வேளாண் துறை இயக்குநா் பாலகாந்தி உள்ளிட்ட அதிகாரிகளுடன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

முதல் கட்டமாக கரும்புப் பயிா் சாகுபடி செய்ய ஊக்கத் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டது.

இதற்கான தொகையும் ஒதுகீடு செய்யப்பட்டது. கரும்புக்கு ஏக்கருக்கு ரூ.10,000 மானியமாக வழங்கும் திட்டம், நிகழாண்டிலேயே அறிமுகப்படுத்தப்படும். இதன்படி, புதுவையில் 1,700 ஏக்கரில் பயிரிடப்படும் கரும்புக்கு ரூ.1 கோடியே 70 ல ட்சம் மானியமாக வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் கரும்பு விவசாயம் செய்யும் 839 விவசாயிகள் பயனடைவா்.

கரும்புக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் நாட்டிலேயே முதல்முறையாக புதுவையில் அறிமுகப்படுத்தப்படுவதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.