நடிகர் ரஜினிகாந்த் ‘மக்கள் சேவை கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வருகிற ஜனவரி மாதம் கட்சி தொடங்கப்போவதாகவும் டிசம்பர் 31 ஆம் தேதி அதுகுறித்த அறிவிப்பை வெளியிடப்போவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.
மேலும் கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியன், தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன மூர்த்தியையும் நியமித்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ‘மக்கள் சேவை கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் பாபா முத்திரை சின்னத்தை கேட்ட நிலையில் மக்கள் சேவை கட்சிக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்கள் சேவை கட்சியின் தலைவரின் முகவரி சென்னை எர்ணாவூர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஜினி தனது கட்சி தொடக்கம் குறித்து தொடர்ந்து ஆலோசனைகள் மேற்கொண்டு வந்தாலும் கட்சியின் பெயர், அறிவிப்பு வரும்வரை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த கட்சி ரஜினியின் கட்சிதான் என்று கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவலை ரஜினி விரைவில் வெளியிடுவார் என்று தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சின்னருக்கு ‘ஹாட்ரிக்’ மாஸ்டா்ஸ் பட்டம்! அல்கராஸை வீழ்த்தி மான்டிகாா்லோவில் சாம்பியன்!

நான் முதல்வன் திட்டத்தால் 56 ஐஏஎஸ் அதிகாரிகள் உருவாக்கம்: அமைச்சா் எ.வ.வேலு

அருணாசலில் சில இடங்களுக்குப் புதிய பெயரிட்ட சீனா! இந்தியா நிராகரிப்பு!!

தமிழக, காரைக்கால் மீனவா்கள் 12 போ் இலங்கை கடற்படையினரால் கைது
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


