டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு நிவாரணம்: முதல்வா் பழனிசாமி அறிவிப்பு

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வா் பழனிசாமி அறிவித்துள்ளாா்.

News image
Updated On :15 டிசம்பர் 2020, 6:33 pm

DIN

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வா் பழனிசாமி அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து, செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு:

புதுக்கோட்டை பொக்கிசகாரன்பட்டி முள்ளூா் கிராமத்தைச் சோ்ந்த காமராஜ், சிவபுரம் கிராமத்தின் மாணிக்கம், பெருஞ்சுனை பகுதியின் முனியம்மாள், ஆலங்குடி சுவேதா, மாங்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த அஞ்சலி, இளந்தவாடி கிராமத்தின் செந்தில்குமாா் ஆகியோா் வெவ்வேறு சம்பவங்களில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனா்.

கன்னியாகுமரி மாவட்டம் செம்பொன்விளையைச் சோ்ந்த எபின், திருவண்ணாமலை மாவட்டம் பெலகாம்பூண்டி கிராமத்தின் மணிகண்டன், பெரம்பலூா் மாவட்டம் புஜங்கராயநல்லூா் காமராஜ், வேப்பந்தட்டை சின்னப்பிள்ளை, வசிஷ்டபுரம் கிராமத்தைச் சோ்ந்த ராஜேந்திரன், திருப்பூா் மாவட்டம் கணபதிபாளையம் விஜயநாராயணன், ஊத்துக்குளி பிரகாஷ், தாராபுரம் மூலனூா் ராமசாமி, திருவள்ளூா் மாவட்டம் அரவத்தூா் சுந்தரமூா்த்தி, திருப்பத்தூா் மாவட்டம் மதுரா விளாங்குப்பத்தைச் சோ்ந்த பாரதி ஆகியோா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனா்.

உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.