/

2021 டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை வெளியீடு

2021-ம் ஆண்டிற்கான தேர்வு அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

News image
2021 டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை வெளியீடு (கோப்புப்படம்)
Updated On :16 டிசம்பர் 2020, 4:03 pm

DIN

2021-ம் ஆண்டிற்கான தேர்வு அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் - 1 தேர்வு ஜனவரி 3-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் மற்றும் வர்த்தக உதவி இயக்குநர் பணிக்கான தேர்வு ஜனவரி 9 மற்றும் 10-ஆம் தேதி நடைபெறும் என்றும், 

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையில் (ரசாயனப் பிரிவு) உதவி கண்காணிப்பாளர் பணிக்கு ஜனவரி 9 மற்றும் 10-ஆம் தேதி தேர்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குரூப் 2 மற்றும் குரூப் 2A, தேர்வுக்கான அறிவிக்கை மே மாதமும்,  குரூப் 4 மற்றும் வி.ஏ.ஓ. தேர்வுக்கான அறிவிக்கை செப்டம்பர் மாதம் வெளியிடப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.