திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

மதுரையில் 850.80 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் 

துபாயிலிருந்து நூதன முறையில் கடத்தி வரப்பட்ட ரூ 42 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 850.80 கிராம் தங்கம் மதுரை விமான நிலையத்தில் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

News image
மதுரை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட நூதன முறையில் கடத்தி வரப்பட்ட 850.80 கிராம் தங்கம்.
Updated On :27 ஜனவரி 2024, 6:08 pm

DIN


துபாயிலிருந்து நூதன முறையில் கடத்தி வரப்பட்ட ரூ 42 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 850.80 கிராம் தங்கம் மதுரை விமான நிலையத்தில் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து மதுரை வரும் விமானத்தில்தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவுக்கு (டிஆா்ஐ) கிடைத்த தகவலின்பேரில் செவ்வாய்க்கிழமை இரவு வந்தே பாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து மதுரை வந்த விமானத்தில் வந்த 141 பயணிகளை சோதனையிட்டனர். 

அதில் கனகவள்ளி, சாய்நம்பு என்ற இரண்டு பெண்கள் தங்கத்தை செயற்கை களி மண்ணோடு கலந்து தங்களது உள்ளாடைக்குள் நூதன முறையில் மறைத்துக் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  

இதையடுத்து அவர்கள் கொண்டுவந்த 850.800 கிராம் தங்கத்தை சுங்க துறையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.42 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். மேலும் தங்கம் கடத்தி வந்த இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து சுங்கத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.