திருச்சியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 80 ஆயிரம் பேர் மனு

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கோரி 80 ஆயிரம் பேர் மனு அளித்துள்ளனர்.
திருச்சியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 80 ஆயிரம் பேர் மனு
திருச்சியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 80 ஆயிரம் பேர் மனு
Updated on
1 min read


திருச்சி: திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கோரி 80 ஆயிரம் பேர் மனு அளித்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில், 138- மணப்பாறை, 139-திருவரங்கம், 140-திருச்சி (மேற்கு), 141- திருச்சி (கிழக்கு), 142- திருவெறும்பூர், 143-லால்குடி, 144- மண்ணச்சநல்லூர், 145- முசிறி, 146- துறையூர் ஆகிய 9 சட்டப் பேரவை தொகுதிகள் உள்ளன. 9 பேரவை தொகுதிகளிலும் 01.01.2022 ஆம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதையொட்டி, நவம்பர் 16 ஆம் தேதி முதல் டிச.15 ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சேர்க்கை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 2,535 வாக்குச் சாவடிகளிலும் முகாம்கள் நடத்தப்பட்டு விணணப்பங்கள் பெறப்பட்டன. சிறப்பு முகாம்கள் முடிவடைந்த நிலையில் பெறப்பட்ட மனுக்கள் மீது வியாழக்கிழமை பரிசீலனை நடைபெற்றது. 

இதில், ஒட்டுமொத்தமாக 9 பேரவை தொகுதிகளிலும் சேர்த்து 1 லட்சத்து 12 ஆயிரத்து 542 மனுக்கள் வந்திருந்தன. இதில், பெயர் சேர்க்கக் கோரி படிவம்-6 விண்ணப்பத்தை 80,547 பேர் அளித்துள்ளனர். பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் (இறந்தவர்கள், இடம்மாறுதல்- படிவம் 7) செய்யக் கோரி  7,441 மனுக்கள் வந்துள்ளன. வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யக் கோரி படிவம்-8 விண்ணப்பத்தை 14,625 பேர் அளித்துள்ளனர். 

பேரவை தொகுதிக்குள் இடமாற்றம் செய்யக் கோரி 9,532 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தகுதியானவற்றை பட்டியலில் இடம்பெறச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com