திருப்பத்தூர் மாவட்டத்தில் 6 இடங்களில் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்தார் அமைச்சர் கே.சி.வீரமணி 

திருப்பத்தூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 6 இடங்களில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் கே.சி.வீரமணி திறந்து வைத்தார்.
ஜோலார்பேட்டை இடையம்பட்டியில் அம்மா மினி கிளினிக்கை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த வணிகவரி மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி.
ஜோலார்பேட்டை இடையம்பட்டியில் அம்மா மினி கிளினிக்கை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த வணிகவரி மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி.

திருப்பத்தூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 6 இடங்களில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் கே.சி.வீரமணி திறந்து வைத்தார்.

தமிழகத்தில் கிராமப்புற பகுதியில் 2000 ஆயிரம் அம்மா மினி கிளினிக் திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் 14 அம்மா மினி கிளினிக் அமைக்கப்படுகிறது.

இதனையடுத்து வியாழக்கிழமை முதற்கட்டமாக இடையம்பட்டி,பொன்னேரி, விசமங்களம், மாடப்பள்ளி, பெருமாபட்டு,பூங்குளம் ஆகிய 6 இடங்களில் அம்மா மினி கிளினிக்கை வணிகவரி மற்றும் பத்திரபதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபில் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.

அதையொட்டி, ஜோலார்பேட்டையில் உள்ள இடையம்பட்டியில் அம்மா மினி கிளினிக்கை வணிகவரி மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.அதையடுத்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபில் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

அப்போது மாவட்ட ஆட்சியர் சிவன்அருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொ.விஜயகுமார், மருத்துவர் சுமதி,ஜோலார்பேட்டை நகர செயலாளர் எஸ்.பி.சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமான மருத்துவ அலுவலர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com