பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பி.எஸ்.என்.எல்.: 5 போஸ்ட் பெய்டு திட்டங்கள் ரத்து

பிஎஸ்என்எல் நிறுவனம், செல்லிடப்பேசிக்கான 5 போஸ்ட் பெய்டு திட்டத்தைத் திரும்பப் பெற்றுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :18 டிசம்பர் 2020, 6:37 pm

DIN

பிஎஸ்என்எல் நிறுவனம், செல்லிடப்பேசிக்கான 5 போஸ்ட் பெய்டு திட்டத்தைத் திரும்பப் பெற்றுள்ளது.

இதுகுறித்து அந்நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். தனியாருக்கு இணையான சேவையை வழங்கி வருகிறது. போஸ்ட் பெய்டு எனும், செல்லிடப்பேசிக்கான மாதக் கட்டண திட்டம், குறைந்தபட்சம் ரூ.99-இல் இருந்து அதிகபட்சமாக ரூ.1,525 வரை செயல்படுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், டிசம்பா் மாதத்தில் மட்டும் ஐந்து போஸ்ட் பெய்டு திட்டத்தை, பி.எஸ்.என்.எல். நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது.

இதன்படி, குறைந்த போஸ்ட்பெய்டு கட்டணமான ரூ.99, ரூ.225, ரூ.325, ரூ.799, ரூ.1,125 திட்டங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இதற்கு பதில், ரூ.199, 798 மற்றும் 999 திட்டங்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.