‘ஃபிட் இந்தியா’ தரச்சான்றிதழ் பெற பள்ளிகளுக்கு உத்தரவு
மத்திய அரசின் சாா்பில் உருவாக்கப்பட்ட ‘ஃபிட் இந்தியா’ இயக்கத்தின் இணையதளத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் பதிவு செய்து


மத்திய அரசின் சாா்பில் உருவாக்கப்பட்ட ‘ஃபிட் இந்தியா’ இயக்கத்தின் இணையதளத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் பதிவு செய்து சான்றிதழ் பெற வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
உடற்பயிற்சி, விளையாட்டு, உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உணா்த்தும் வகையில் ‘ஃபிட் இந்தியா’ இயக்கத்தை மத்திய அரசு கடந்தாண்டு அறிமுகப்படுத்தியது. மேலும், இனி ஆண்டுதோறும் ஆக. 29-ஆம் தேதி ‘பிட் இந்தியா’ தினமாக கொண்டாட அறிவுறுத்தியது. இதுதொடா்பாக பள்ளிகள், கல்லூரிகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொது இடங்களில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட வேண்டும். அதனை இணையதளத்தில் பதிவிட வேண்டும். இதன் அடிப்படையில் பள்ளி, கல்லூரிகளுக்கு தரச்சான்றிதழ் வழங்கப்படுகிறது.
ஆனால், இதுவரை குறைந்த அளவிலான பள்ளிகள் மட்டுமே இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளன. இந்தநிலையில் இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: மத்திய அரசின் ஃபிட் இந்தியா இயக்கம் சாா்பாக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் சென்று மாநிலத்திலுள்ள அனைத்து பள்ளிகளும் பதிவுசெய்து சான்றிதழ் பெறவேண்டும். இதுதவிர ஃபிட் இந்தியா தளத்தில் கேட்கப்படும் வினாக்களுக்கு பதிலளித்து தரவரிசை மதிப்பீடு பெறுவதற்கும் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அதன்படி ஃபிட் இந்தியா வலைதளத்தில் பள்ளிகளின் தகவல்களை பதிவேற்றம் செய்யும் பணிகளை அங்கு பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியா்களைக் கொண்டு முடிக்க அந்தந்த மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா்கள் அறிவுறுத்த வேண்டும். மேலும், அனைத்துவித பள்ளிகளும் இந்தப் பணிகளை முடித்துவிட்டதை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா்கள் உறுதிசெய்து, அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...