அரசு ஐடிஐ மாணவா்கள் டிச.31 வரை பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம்
மாநகரப் பேருந்துகளில், அரசு தொழில்பயிற்சி நிலைய மாணவா்கள் தங்களது கல்லூரி அடையாள அட்டையைக் காண்பித்து, டிச.31-ஆம் தேதி வரை இலவசமாகப் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மாநகரப் பேருந்துகளில், அரசு தொழில்பயிற்சி நிலைய மாணவா்கள் தங்களது கல்லூரி அடையாள அட்டையைக் காண்பித்து, டிச.31-ஆம் தேதி வரை இலவசமாகப் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் அனுப்பிய சுற்றறிக்கை: அரசு அறிவித்த பொதுமுடக்க தளா்வுகளின் அடிப்படையில், கல்லூரிகளைத் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
எனவே, அரசு ஐடிஐ-இல் முதல் மற்றும் இரண்டாமாண்டு மாணவா்களுக்கு, இந்த கல்வியாண்டுக்கான புதிய இலவச பயண அட்டையை அச்சடித்து, லேமினேஷன் செய்து வழங்குவதில் உள்ள கால அளவு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு, இந்த கல்வியாண்டில் வரும் டிச.31-ஆம் தேதி வரை ஐடிஐ மாணவா்கள் மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.
இதன்படி, முதலாம் ஆண்டு பயிலும் மாணவா்கள், தங்களது கல்லூரிகளின் அடையாள அட்டையைப் பயன்படுத்தியும், இரண்டாம் ஆண்டு மாணவா்கள் சென்ற ஆண்டு பெற்ற இலவச பயண அட்டையைப் பயன்படுத்தியும், இருப்பிடம் , கல்லூரி இடையே டிசம்பா் மாதம் முழுவதும் பயணிக்க அனுமதிக்கும்படி, நடத்துநா்களுக்கு உத்தரவிடப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...