அடுத்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரத்தில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

குமரிக் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக ராமநாதபுரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
ராமநாதபுரத்தில் கனமழைக்கு வாய்ப்பு
ராமநாதபுரத்தில் கனமழைக்கு வாய்ப்பு
Updated on
1 min read

குமரிக் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக ராமநாதபுரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் இன்று வெளியிட்டு அறிக்கையில்,

குமரிக் கடல் பகுதியில் வளிமண்டலத்தில் ஒரு கிலோ மீட்டர் உயரம் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், தெற்கு உள் மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழையும், ஏனைய வட மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும்.

அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழையும், தெற்கு உள் மாவட்டங்களில் லேசான மழையும். வடமாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சம் மழைபெய்த விவரம்

நாகப்பட்டினம் 13 செ.மீ மழையும், திருப்பூண்டி, பரங்கிப்பேட்டை தலா 7 செ.மீ மழையும், தலைஞாயிறு, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி தலா 6 செ.மீ மழையும், அய்யம்பேட்டை 5 செ.மீ மழையும், குடவாசல், காரைக்கால், பாண்டவையர் ஹெட், புவனகிரி தலா 4 செ.மீ மழையும், செந்துறை, திருவிடைமருதூர், ராமேஸ்வரம், கிராண்ட் அணைக்கட்டு, நன்னிலம், கொள்ளிடம், புள்ளம்பாடி, மண்டபம், சீர்காழி தலா 3 செ.மீ மழையும் பெய்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com