திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சியில் ஒருவருக்கு மட்டுமே கரோனா தொற்று உள்ளது என ஆணையர் லதா பெருமிதத்துடன் தெரிவித்தார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு, சீனாவில் கருவாகி உருவான கண்ணுக்குத் தெரியாத கிருமியான கரோனா தொற்று நோய் இன்று வரை உலகத்தையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. மாணவ, மாணவிகளின் கல்வி வீணாகிவிட்டது. வணிகர்களின் வியாபாரங்கள் படுத்துவிட்டன. நான்குச் சக்கர வாகனங்கள், பேருந்துகள், ரயில்கள், கப்பல்கள் மற்றும் விமானங்கள் உள்ளிட்ட அனைத்து வாகன சேவைகளும் குறைந்து விட்டன. இவைகள் மட்டுமல்ல, அனைத்து வழிப்பாட்டுத் தலங்களும் முன்பு போல், முழுமையாகச் செயல்படுத்த முடியவில்லை. மொத்தத்தில், கரோனா தொற்று உலகத்தையே புரட்டிப் போட்டுள்ளது என்பதுதான் பொருத்தமானதாகும். கரோனா தொற்று பல லட்சங்களைத் தாண்டி விட்டது.
ஆயிரக்கணக்கில் உயிரிழந்துள்ளனர். கரோனா தொற்று நோயை ஒழிப்பதற்காக தமிழக அரசும், சுகாதாரத் துறையும் சிறந்த முறையில் பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில், தமிழகத்தில் சிறந்த நகராட்சியாக, நகராட்சிக்கான 3-வது விருதைப் பெற்ற, திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சியில், ஒருவருக்கு மட்டுமே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் ஆர்.லதா கூறியது,
திருவாரூர் மாவட்டத்தில் தற்போது வரை 10,746 பேருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. இதில், 10,535 பேர் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ளனர். கூத்தாநல்லூர் நகராட்சியில், 2020 மார்ச் மாதம் முதல், டிசம்பர் 18 ஆம் தேதி வரை, மொத்தம் 177 பேர் கரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 169 பேர் சிகிச்சை முடிந்து நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பலனளிக்காமல் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது, ஒரே ஒரு பெண்மணி மட்டும், திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கூத்தாநல்லூர் நகராட்சி கரோனா தொற்று இல்லாத நகராட்சியாக இருக்க வேண்டும். தொடர்ந்து, நகர மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும். பொதுமக்கள் வெளியில் வரும் போது கட்டாயம் முகக் கவசம் அணிந்து வாருங்கள். சமூக இடைவெளியைக் கடைப்பிடியுங்கள். நகரத்தில் உள்ள குறைபாடுகளைத் தொடர்ந்து சரி செய்யப்படும் என ஆணையர் லதா தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி

புதுவை: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

கேரளம்: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

புதுச்சேரி, கேரளம், அஸ்ஸாமில் வாக்குப் பதிவு தொடங்கியது
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


