டார்ச் லைட் சின்னம் வேண்டாம்: எம்.ஜி.ஆர். மக்கள் கட்சி

சட்டப் பேரவைத் தேர்தலில் டார்ச் லைட் சின்னம் வேண்டாம் என்று எம்.ஜி.ஆர். மக்கள் கட்சி தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்துள்ளது.
டார்ச் லைட் சின்னம் வேண்டாம்: எம்.ஜி.ஆர். மக்கள் கட்சி (கோப்புப்படம்)
டார்ச் லைட் சின்னம் வேண்டாம்: எம்.ஜி.ஆர். மக்கள் கட்சி (கோப்புப்படம்)
Updated on
1 min read

சட்டப் பேரவைத் தேர்தலில் டார்ச் லைட் சின்னம் வேண்டாம் என்று எம்.ஜி.ஆர். மக்கள் கட்சி தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்துள்ளது.

இது தொடர்பாக அறிக்கையின் வாயிலாக எம்.ஜி.ஆர். மக்கள் கட்சித் தலைவர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளதாவது, 

டார்ச் லைட் சின்னம் தவிர்த்து மாற்றுச் சின்னம் வழங்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்துள்ளேன். 

எம்.ஜி.ஆரை நினைவுபடுத்தும் சின்னங்களை ஒதுக்காமல் டார்ச் லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது ஏற்புடையதல்ல.

எம்.ஜி.ஆரை நினைவுபடுத்தும் விதமாக கழுத்துப்பட்டை, கைவண்டி, தொப்பி, கப்பல், டிராக்டர், கோட், பெல்ட் போன்றவற்றில் ஏதேனுமொரு புதிய சின்னத்தை ஒதுக்குமாறு கடிதத்தில் கோரியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எம்.ஜி.ஆர். மக்கள் கட்சி டார்ச் லைட் சின்னத்தை வேண்டாம் எனக் கூறியதால் மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com