நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சிலிண்டர் விலை உயர்வு: திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதனப் போராட்டம்

சமையல் எரிவாயு உருளை விலை உயர்வைக் கண்டித்து திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதனப் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.

News image

திருப்பூரில் சமையல் எரிவாயு உருளை விலை உயர்வை கண்டித்து அடுப்பு வைத்து சமைக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்.

Updated On :20 டிசம்பர் 2020, 10:20 am

DIN

திருப்பூர்: சமையல் எரிவாயு உருளை விலை உயர்வைக் கண்டித்து திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதனப் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சிக்கு உள்பட்ட 50 ஆவது வார்டு பட்டுக்கோட்டையார் நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலையில் விறகு அடுப்பு வைத்து சமைக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு கிளைச் செயலாளர் அ.செந்தில்குமார் தலைமை வகித்தார். இதில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பெண்கள் சாலையில் விறகு அடுப்பு வைத்து சமைத்தனர்.

இதுகுறித்து போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறியதாவது: மத்திய அரசு சமையல் எரிவாயு உருளை விலையை கடுமையாக உயர்த்தியுள்ளதால் ஏழை, நடுத்தர மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே,சமையல் எரிவாயு விலை உயர்வை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றனர்.

இந்தப் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.ரவி, ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலாளர் என்.சேகர், தலைமை மண்டலக்குழு உறுப்பினர் எம்.பஞ்சவர்ணம், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் சங்கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.