கோலம் போடுவது இனி ஈஸி

மார்கழி மாதம் என்றாலே வாசலை அலங்கரிக்கும் கோலங்களும், கோவில்களில் ஒலிக்கும் பக்தி பாடல்களையும் மறக்க முடியாது.
கோலம் போடுவதற்கான நவீன பொருள்களை பார்வையிடும் பெண்கள்.
கோலம் போடுவதற்கான நவீன பொருள்களை பார்வையிடும் பெண்கள்.

மார்கழி மாதம் என்றாலே வாசலை அலங்கரிக்கும் கோலங்களும், கோவில்களில் ஒலிக்கும் பக்தி பாடல்களையும் மறக்க முடியாது. அதிகாலையில் எழுந்து வாசலில் தண்ணீர் தெளித்து, வண்ணக் கோலங்களால் வீட்டை அலங்கரிக்க சில மணி நேரமாவது தேவைப்படும். கோலம் விரும்பிகளுக்கு காலம் ஓர் தடையில்லை.

ஆனால், பல்வேறு காரணங்களால் கோலமிட யோசிப்பவர்களின் வேலையை சுலபப்படுத்தும் நவீன பொருள்களின் வருகை ஆர்வத்தை துாண்டி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு துளையிடப்பட்ட ‘பிளாஸ்டிக்’ உருளை கோல அச்சுகள் புழக்கத்துக்கு வந்தன. இதில் நேராகவோ அல்லது ‘ஜிக் ஜாக்’ வடிவிலோ மட்டுமே கோடுகளை போட முடியும். தற்போது வந்துள்ள சல்லடை வடிவிலான கோல அச்சுத் தட்டுக்களால், மலர்கள், சுவாமி உருவங்கள், மயில் உள்ளிட்ட டிசைன்களில் கோலம் போட முடியும்.

தவிர, தகரத்தில் ‘பார்டர் லைன்’, கோலம் இடும் ‘பிளாஸ்டிக் பென்சில்’ என பல்வேறு பொருள்களின் புதிய வருகை கோலமிடும் ஆர்வத்தை துாண்டி வருகிறது. 

இதன் விற்பனையாளர்கள் இதுகுறித்து, 'சல்லடை வடிவ கோல அச்சுக்கள் சிறியது, 10 ரூபாய் முதல் அளவுக்கு ஏற்ப, 140 ரூபாய் வரை பல டிசைன்களில் விற்பனையாகின்றன. ‘பார்டர் லைன்’ இடும் தகரம், 10 ரூபாய்க்கும், கோலமிடும் பிளாஸ்டிக் பென்சில், 30 ரூபாய், கை வடிவிலான பிளாஸ்டிக், 20 ரூபாய் என பல்வேறு புது வரவுகள் கோலம் இடும் ஆர்வத்தை துாண்டும். வட மாநிலங்களில் இருந்து இந்த பொருட்கள் பெரும்பாலும் கொண்டுவரப்பட்டு இங்கு விற்கப்படுகிறது’ என்றார்.

கோலம் ... வீட்டை மட்டுமல்ல பெண்களின் கலை அறிவை பிரமிக்க வைக்கிறது என்றால் அது மிகை அல்ல..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com