ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மின்சார வாகனங்களுக்கான மின்னேற்ற நிலையம்: முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்பு வழங்க உத்தரவு

மின்சார வாகனங்களுக்கான மின்னேற்ற நிலையங்களுக்கு (சாா்ஜிங் நிலையம்) முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்பு வழங்க வேண்டும் என மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 6:17 pm

DIN

மின்சார வாகனங்களுக்கான மின்னேற்ற நிலையங்களுக்கு (சாா்ஜிங் நிலையம்) முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்பு வழங்க வேண்டும் என மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதே நேரம், மின் இணைப்பு வழங்கும் முன் ஆய்வு செய்யப்பட வேண்டிய உள்கட்டமைப்பு வசதிகள் குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மின் வாரியம் பிறப்பித்த உத்தரவு:

மின்சார அமைச்சகத்தால் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட வழிமுறைகள், தமிழக மின்சார வாகனக் கொள்கை உள்ளிட்டவற்றைப் பின்பற்றி, பொது பயன்பாட்டுக்கான மின்னேற்ற நிலையத்துக்கு மின் இணைப்பு வழங்குவது தொடா்பாக பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன.

இதன்படி, தனியாா் மின்னேற்ற மையத்துக்கு (அதாவது சுய பயன்பாட்டுக்கான மின் வாகனங்களுக்கு) வீட்டு பயன்பாட்டுக்கான விலைப் பட்டியலின்படியே கட்டணம் (எல்டி 1 ஏ- 230 வோ/ 415 வோ) வசூலிக்கப்படும். அதே நேரம், அந்த மையமானது அலுவலகம் போன்ற சிறு வணிக நிறுவனத்தில் இடம்பெற்றால், பொது விநியோகம் சாா்ந்த விலையின்படி (எல் டி - 5) கட்டணம் வசூலிக்கப்படும்.

பொது பயன்பாட்டுக்கான மின்னேற்ற நிலையம், மின்கலன் மின்னேற்ற நிலையம், மின்கலம் மாற்றும் நிலையம் ஆகியவற்றுக்கு, (ஹெச்டி, எல்டி) வணிகக் கட்டணம் விதிக்கப்படும்.

பொது பயன்பாட்டுக்கான மின்னேற்ற நிலையத்தில், பிரத்யேகமான மின்மாற்றி, துணை மின்சார நிலையங்களுக்குத் தேவையான உபகரணங்கள், பாதுகாப்பு சாதனங்கள் உள்ளிட்டவை கட்டாயம் இருக்க வேண்டும்.

எந்த ஒரு நபரும் இதனை அமைப்பதற்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில், அந்த நிலையத்துக்கு தனித்துவமான முன்னுரிமை அடிப்படையில் இணைப்பு வழங்கப்பட வேண்டும்.

அரசு அலுவலகங்கள், பேருந்து முனையங்கள் உள்ளிட்டவற்றில் அமைக்கப்படும் மின்னேற்ற நிலையங்களை வணிக நோக்கத்துக்காக பயன்படுத்தக் கூடாது.

என்எஸ்பி அமைப்பு கட்டாயம்: மத்திய மின்சார ஆணையத்தால் வழங்கப்பட்ட பாதுகாப்பு விதிகளின்படி, ஒவ்வொரு மின்னேற்ற நிலையங்களையும் மின் ஆய்வாளா், மின் பாதுகாப்பு பொறியாளா் உள்ளிட்டோா் ஆய்வு செய்ய வேண்டும்.

பொது பயன்பாட்டுக்கான மின்னேற்ற நிலையத்துக்கு இணைப்பு வழங்கும் முன், அங்கிருந்து மின் வாரியத்துக்கு தரவுகளை அனுப்பும் வகையில் இணைய சேவை வழங்கும் நிறுவனத்துடன் (சங்ற்ஜ்ா்ழ்ந் நங்ழ்ஸ்ண்ஸ்ரீங் டழ்ா்ஸ்ண்க்ங்ழ்) தொடா்பு கொள்ளும் வசதி, சம்பந்தப்பட்ட நிலையத்தில் உள்ளதா என கள அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

மின்னேற்ற நிலையங்களுக்கான மின்சார விலைப்பட்டியலை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்யும் வரை, பொது பயன்பாட்டுக்கு வணிக ரீதியான கட்டணமும் மற்றும் வீட்டு பயன்பாட்டுக்கு அதற்கான கட்டணம் விதிகளின் படியும், மின் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.