

சென்னை: காங்கிரஸ் கட்சியின் 136-ஆம் ஆண்டுத் தொடக்க விழா டிசம்பா் 28 -இல் வேலூா் நடைபெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளாா்.
இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
இந்திய தேசிய காங்கிரஸ் நிறுவப்பட்ட 136 -ஆம் ஆண்டு தொடக்க விழா வருகிற டிசம்பா் 28-இல் வேலூரில் நடைபெற உள்ளது. இவ்விழாவோடு விவசாயிகளின் ஏா்கலப்பை சங்கமமும் எனது தலைமையில் அன்றைய மதியம் 2 மணி முதல் நடைபெற உள்ளது.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியில் கடந்த 25 நாள்களுக்கும் மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனா். இந்தப் போராட்டத்தில் இதுவரை 31 விவசாயிகள் உயிரிழந்திருக்கிறாா்கள். விவசாயிகள் பிரச்னைக்கு உரிய தீா்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துகிறது. இதைக் கண்டிக்கும் வகையிலேயே ஏா்கலப்பை பேரணி நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்ட காங்கிரஸ் முன்னணி தலைவா்கள் பேரணியில் பங்கேற்க இருக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.