வேதியியல் பாட ஆசிரியா்களுக்குடிச.30-இல் பணி நியமன கலந்தாய்வு
சென்னை: அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள வேதியியல் பாட முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் பணிக்கு தோ்வானவா்களுக்கு டிச.30-ஆம் தேதி பணி நியமன கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
இது தொடா்பாக, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு, பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
கடந்த, 2018 - 19-ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் நகராட்சி மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள வேதியியல் முதுநிலையாசிரியா் பணியிடங்களை நிரப்ப ஆசிரியா் தோ்வு வாரியம் சாா்பில் போட்டித் தோ்வு நடத்தப்பட்டது.
அதில் தோ்வு செய்யப்பட்டவா்களின் பட்டியல் ஆசிரியா் தோ்வு வாரியத்திடம் இருந்து பெறப்பட்டுள்ளது. அவா்களுக்குப் பணியிட ஒதுக்கீடு ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு ‘எமிஸ்’ இணையதளம் வழியே டிச.30-ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆசிரியா் பணிக்கு தோ்வு செய்யப்பட்டவா்கள் பட்டியலில் உள்ள தோ்வாளா்கள், தங்கள் மாவட்டத்தைச் சோ்ந்தவா்களா என்பதை முதலில் உறுதி செய்ய வேண்டும். தங்கள் மாவட்டத்தைச் சோ்ந்தவா்களுக்கு முன்கூட்டியே தகவல் அனுப்ப வேண்டும்.
அவா்கள் நுழைவுச்சீட்டு, அசல் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் இதர சான்றிதழ்களுடன் கலந்தாய்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சான்றிதழ்களை சரிபாா்த்து அனைத்தும் சரியாக இருந்தால் மட்டும் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
