வாழப்பாடியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நலத்திட்ட உதவிகள்

சேலம் மாவட்டம் வாழப்பாடி ஒன்றிய ரஜினி மக்கள் மன்றம் சார்பில், ரஜினிகாந்த் பிறந்த நாள் விழாவையொட்டி வாழப்பாடி பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
துப்புரவுப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்.
துப்புரவுப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்.
Updated on
1 min read

சேலம் மாவட்டம் வாழப்பாடி ஒன்றிய ரஜினி மக்கள் மன்றம் சார்பில், ரஜினிகாந்த் பிறந்த நாள் விழாவையொட்டி வாழப்பாடி பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இவ்விழாவிற்கு, மாவட்டச் செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். ஒன்றிய நிர்வாகி அசோகன் வரவேற்றார். மாவட்ட நிர்வாகிகள் பழனிவேல் கணேசன், விவசாய அணி ஜெயசங்கர், மகளிரணி திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இவ்விழாவில், வாழப்பாடி பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. வாழப்பாடி ஒன்றிய நிர்வாகிகள் அருணாசலம், சுகவனேஸ்வரர் இன்பராஜ், ரவி, முருகன், இளங்கோ, சரவணன், சிவலிங்கம், பார்த்திபன், உலகநாத உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் நல்லாட்சி மலர்ந்திட, ரஜினிகாந்த் தொடங்கியுள்ள புதிய கட்சியில் இணைந்து ஆதரவளிக்க வேண்டுமென, நிர்வாகிகள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com