இளைஞர், இளம்பெண்கள் பாசறை மற்றும் பூத் மகளிர் குழு ஆலோசனைக் கூட்டம்
ஈரோடு பெரியசேமூர் பகுதி அ.தி.மு.க. சார்பில், இளைஞர், இளம்பெண்கள் பாசறை மற்றும் பூத் மகளிர் குழு ஆலோசனைக் கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது.


ஈரோடு பெரியசேமூர் பகுதி அ.தி.மு.க. சார்பில், இளைஞர், இளம்பெண்கள் பாசறை மற்றும் பூத் மகளிர் குழு ஆலோசனைக் கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்துக்கு பெரியசேமூர் பகுதி செயலாளர் எஸ்.டி.தங்கமுத்து தலைமை தாங்கினார். ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச்செயலாளர் வீரக்குமார், மாணவர் அணி இணைச்செயலாளர் நந்தகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, இளைஞர் & இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகளிடம், பூத் கமிட்டி அமைப்பது குறித்தும், உறுப்பினர் சேர்க்கை குறித்தும் ஆலோசனைகளை வழங்கினார்கள்.
இதில் மகளிர் அணி மாவட்ட செயலாளர் மல்லிகா பரமசிவம், இளைஞர் & இளம்பெண்கள் பாசறைச் செயலாளர் மணிகண்டன், மாணவர் அணி செயலாளர் ரத்தன் பிரதீவ், பகுதி செயலாளர்கள் கேசவமூர்த்தி, கோவிந்தராஜ், முருகுசேகர், ராமசாமி, ஒன்றிய செயலாளர் பூவேந்திர குமார், வட்ட செயலாளர்கள் டி.குமார், தமிழரசு, நகர பாசறை செயலாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...