

திருப்போரூர் அருகே பிரபல ரௌடி சதீஷை வெட்டிக்கொன்ற கும்பல், அவரது உடலை எரிக்க முயற்சித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த மேலையூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (29). பிரபல ரௌடியான இவர் மீது செங்கல்பட்டு, மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, திருப்போரூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, ஆள்கடத்தல், வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் நேற்றிரவு சதீஷை மேலையூர் சுடுகாட்டில் மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்துள்ளனர். மேலும் முகத்தில் அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்து விட்டு தப்பியோடியுள்ளனர்.
இன்று காலை அவ்வழியாகச் சென்றவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற திருப்போரூர் காவலர்கள் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரௌடி சதீஷ் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.