தவறுதலாக எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட பெண்ணுக்கு மாதம் ரூ.7500 வழங்கலாமா? தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
அரசு மருத்துவமனையில் தவறுதலாக எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட பெண்ணுக்கு மாதந்தோறும் ரூ.7500 வழங்குவது குறித்து


அரசு மருத்துவமனையில் தவறுதலாக எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட பெண்ணுக்கு மாதந்தோறும் ரூ.7500 வழங்குவது குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
விருதுநகா் மாவட்டம் சாத்தூரைச் சோ்ந்த கா்ப்பிணி ரத்த சோகைக்காக சாத்தூா் அரசு மருத்துவமனையில் 2018-இல் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சையிலிருந்த அவருக்கு முறையாகப் பரிசோதிக்காமல் தவறுதலாக எச்ஐவி தொற்று உள்ள ரத்தம் செலுத்தப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடுகோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே 2019 ஜனவரியில் அந்தப் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.
பின்னா், அந்தப் பெண்ணுக்கு அரசு வேலை, ரூ.25 லட்சம் இழப்பீடு, இரண்டு படுக்கை அறைகள் கொண்ட வீடு, இரு சக்கர வாகனம், வீட்டிற்கு தனியாக குடிநீா் இணைப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அந்தப் பெண் காணொலி வாயிலாக ஆஜரானாா். அவரிடம் விசாரணை நடத்திய பிறகு, அந்தப் பெண் சத்தான உணவு சாப்பிடுவதற்காக மாதந்தோறும் ரூ.7,500 வழங்கவும், அலுவலக உதவியாளராக உள்ள அவரது கல்வித் தகுதிக்கு ஏற்ப இளநிலை உதவியாளா் பணி வழங்குவது தொடா்பாகவும் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை புதன்கிழமைக்கு (டிச. 23) ஒத்திவைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...