/

காமயகவுண்டன்பட்டியில் கரோனாவால் பாதித்தோருக்கு சிறப்பு முகாம்

தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டி ஆரம்ப  சுகாதார நிலையத்தில் கரோனா தொற்றினால் பாதிக்கபட்டோருக்கான சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
காமயகவுண்டன்பட்டியில் கரோனாவால் பாதித்தோருக்கு சிறப்பு முகாம்
Updated On :23 டிசம்பர் 2020, 10:31 am

DIN

தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டி ஆரம்ப  சுகாதார நிலையத்தில் கரோனா தொற்றினால் பாதிக்கபட்டோருக்கான சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு மருத்துவ அலுவலர் சுதா தலைமை தாங்கினார், டாக்டர் முருகானந்தம் முன்னிலை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கண்ணன் அனைவரையும் வரவேற்றார்.

முகாமில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்படக் கூடிய உடல் அசதி, மூட்டுவலிகள், நுரையீரல் பாதிப்பு, இருதய பாதிப்பு, கண் பாதிப்பு, நரம்பு மண்டல பாதிப்பு, மூளை நோய்கள், மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற பாதிப்புகளுக்கு சித்த மருந்துகள் அடங்கிய பெட்டகம் வழங்கப்பட்டது.
.
இந்த மருந்து பெட்டகத்தில் மருதம்பட்டை சூரணம் நெல்லிக்காய் லேகியம், அமுக்கரா சூரணம், அன்னபேதி, சிலாசத்து ஆகிய மாத்திரைகள், நிலவேம்பு மற்றும் கபசுரக் கஷாயம் பிண்ட தைலம், மஞ்சள் கற்கம்
போன்ற மருந்துகள் உள்ளன என்று சித்தமருத்துவர் சிராஜ் தீன் கூறினார். மேலும் அவர் பேசுகையில், நோய்களிலிருந்து உடலை பாதுகாக்கும் மஞ்சள் கற்கம், மருதம்பட்டை சூரணம், நோய் எதிர்ப்புச் சக்தி அளிக்கும் நெல்லிக்காய் லேகியம், இரத்த சோகை நீக்கும் அன்னபேதி மாத்திரை, உடல்வலி அசதி போக்கும் அமுக்கரா சூரணம், பிண்ட தைலம், கால்சியம் சத்துள்ள சிலாசத்து மாத்திரை போன்றவை இந்த பெட்டகத்தில் அடங்கியுள்ளது என்றார்.

தொற்றால் பாதித்தவர்கள், தினமும் நடைப்பயிற்சி, யோக ஆசனங்கள், மூச்சுப் பயிற்சி, தியானங்கள், ஆரோக்கியமான உணவுகள், நெல்லிக்கனி, பூண்டு, மிளகு, போன்றவைகளை தினந்தோறும் பின்பற்ற வேண்டும் என்று அறிவுரைகள் கூறப்பட்டது. முகாமில் சுகாதார ஆய்வாளர்கள். சூரியகுமார், சரவணன், கௌதம், கிராம சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.