கோவை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிப்பு
எம்.ஜி.ஆர் உருவப்படத்துடன் ஊர்வலமாக சென்று அவிநாசி சாலையில் உள்ள எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


எம்.ஜி.ஆர் 33 வது நினைவு நாளை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் அம்மன் கே. அர்ச்சுனன் எம்.எல்.ஏ தலைமையில் கருப்பு சட்டை அணிந்து அதிமுகவின் அலுவலகத்தில் இருந்து எம்.ஜி.ஆர் உருவப்படத்துடன் ஊர்வலமாக சென்று அவிநாசி சாலையில் உள்ள எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் உறுதி மொழியை ஏற்றுக்கொண்டு மௌன அஞ்சலியும் செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ச.மா வேலுசாமி, ஆவின் தலைவர் கே.பி ராஜு, மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் கே.ஆர் ஜெயராமன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் அசோக் குமார், தமிழ் முருகன், அன்னக்கொடி ரவி, உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...