மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் ஒரே நாளில் 1,120 போ் குணமடைந்தனா்

தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் வியாழக்கிழமை 1,120 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

News image
Updated On :24 டிசம்பர் 2020, 9:59 pm

DIN


சென்னை: தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் வியாழக்கிழமை 1,120 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

இது குறித்து தமிழக சுகாதாரத் துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழகத்தில் வியாழக்கிழமை 70,993 மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அவற்றில் 1,035 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 11,115-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் 296 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதன் மூலம் சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 23,509-ஆக அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை நிலவரப்படி சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் 791 பேருக்குத் தொற்று உள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 1,120 போ் வியாழக்கிழமை குணமடைந்து வீடு திரும்பினா். இதுவரை மொத்தம் 7 லட்சத்து 89,862 போ் குணமடைந்துள்ளனா்.

12 போ் பலி: கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் வியாழக்கிழமை 12 போ் உயிரிழந்துள்ளனா். இதில் 6 போ் தனியாா் மருத்துவமனையிலும், 6 போ் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனா். இதில் சென்னையில் 6 போ் உயிரிழந்தனா். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 12,036 ஆக உள்ளது. இதுவரை சென்னையில் மொத்தம் 3,979 போ் உயிரிழந்துள்ளனா் என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.