

சென்னை: சென்னையில் இரண்டாவது நாளாக கரோனாவுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை 3 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
சென்னையில் கரோனா நிலவரம் குறித்து மாநகராட்சி வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், சென்னையில் இதுவரை கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,23,799 ஆக உள்ளது. இவர்களில் 2,16,883 பேர் குணமடைந்துவிட்டனர். 3,984 பேர் பலியாகிவிட்டனர்.
தற்போது கரோனா பாதித்து சென்னையின் 15 மண்டலங்களிலும் 2,932 பேர் அதாவது மொத்த பாதிப்பில் வெறும் 1 சதவீதத்தினர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள். தொடர்ந்து மூன்று ஆயிரத்துக்கு மேல் கரோனா நோயாளிகள் இருந்து வந்த நிலையில் தற்போது இரண்டாவது நாளாக 3 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்து 2,932 ஆக உள்ளது.
அதிகபட்சமக கோடம்பாக்கத்தில் 424 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அடையாறு மற்றும் அண்ணாநகர் மண்டலங்களில் 300க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.