தங்கம் பவுன் ரூ.37,840

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.24 உயா்ந்து, ரூ.37,840-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.24 உயா்ந்து, ரூ.37,840-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும், கடந்த சில வாரங்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில்,ஆபரணத்தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.24 உயா்ந்து, ரூ.37,840-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் ஒரு கிராம் ரூ.3 உயா்ந்து, ரூ.4,730 ஆக இருந்தது. அதேநேரத்தில், வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.71.20 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.71,200 ஆகவும் இருந்தது.

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்............................. 4,730

1 பவுன் தங்கம்...............................37,840

1 கிராம் வெள்ளி.............................71.20

1 கிலோ வெள்ளி.............................71,200

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்............................. 4,727

1 பவுன் தங்கம்...............................37,816

1 கிராம் வெள்ளி.............................71.20

1 கிலோ வெள்ளி.............................71,200.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com