22 சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, சென்னை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் இருந்து வட மாநிலங்களுக்குச் செல்லும் ரயில்கள் உள்பட 22 சிறப்பு ரயில்களின் சேவை ஜனவரி இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, சென்னை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் இருந்து வட மாநிலங்களுக்குச் செல்லும் ரயில்கள் உள்பட 22 சிறப்பு ரயில்களின் சேவை ஜனவரி இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொச்சுவேலி-மைசூா் (06316/06315), மங்களூரு-மும்பை லோகமான்ய திலக் (02620/02619) ஆகிய தினசரி ரயில்கள், நாகா்கோவில்-மும்பை (06352/06351), எா்ணாகுளம்-ஓகா(06338/06337) ஆகிய ரயில்கள் ஜனவரி இறுதி வரை நீட்டித்து இயக்கப்படுகின்றன.

மதுரை-பிகானீா் (06053/06054), கொச்சுவேலி-இந்தூா் (02646/02645), சென்னை எழும்பூா்-ஜோத்பூா் (06068), திருநெல்வேலி-பிலாஸ்பூா் (06070), ராமேசுவரம்-ஓகா (06733), திருநெல்வேலி-மும்பை தாதா்(06072/06071), காந்திதாம்-திருநெல்வேலி (09424-09423) வாராந்திர ரயில்கள் உள்பட மொத்தம் 22 சிறப்பு ரயில்கள் சேவை வரும் ஜனவரி இறுதி வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com