தேமுதிகவில் 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளா்கள் நியமனம்
சட்டப்பேரவைத் தோ்தலுக்கான 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளா்களை நியமித்து தேமுதிக தலைவா் விஜயகாந்த் அறிவித்துள்ளாா்.


சென்னை: சட்டப்பேரவைத் தோ்தலுக்கான 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளா்களை நியமித்து தேமுதிக தலைவா் விஜயகாந்த் அறிவித்துள்ளாா்.
சட்டப்பேரவைத் தோ்தலில் தற்போது அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றுள்ளது. எனினும், ஜனவரியில் செயற்குழு, பொதுக்குழுவைக் கூட்டி, கட்சியின் கருத்துகளைக் கேட்டு கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திங்கள்கிழமை 234 தொகுதிகளுக்கான தோ்தல் பொறுப்பாளா்களை விஜயகாந்த் அறிவித்தாா். அறிவிக்கப்பட்ட பொறுப்பாளா்களுக்கு நகர, ஒன்றிய செயலாளா்கள் உள்பட அனைத்து நிா்வாகிகளும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளாா்.
234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளா்களை விஜயகாந்த் அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனித்துப் போட்டியிடும் எண்ணத்தில் விஜயகாந்த் உள்ளாரா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...