கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் மதுபான விலை உயர்வு

டாஸ்மாக் கடைகளில் மதுபான விலை உயர்வு வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.

News image
Updated On :7 பிப்ரவரி 2020, 2:42 am

DIN

டாஸ்மாக் கடைகளில் மதுபான விலை உயர்வு வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.

தமிழகம் முழுவதும் 5,300 டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளை தமிழ்நாடு வாணிபக் கழகம் (டாஸ்மாக்) நடத்தி வருகிறது. 

இந்த நிலையில், அனைத்து மதுபானங்களின் விலையும் உயர்த்தி வியாழக்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து விலை உயர்வானது வெள்ளிக்கிழமை (பிப். 7) முதல் அமலுக்கு வருகிறது.

அதன்படி, தற்போது விற்பனையாகும் விலையை விட கூடுதலாக குவாட்டர் ரூ.10, ஆஃப் ரூ.20, ஃபுல் ரூ.40, பீர் ரூ.10 விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.2,200 கோடி கூடுதலாக வருவாய் கிடைக்கும். 

முன்னதாக, 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மதுபான வகைகளின் விலை உயர்த்தப்பட்டது. கடந்த ஆண்டு டாஸ்மாக் மூலம் தமிழக அரசுக்கு ரூ.31 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.