தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நடிகர் ரஜினிகாந்த் ஜூன் மாதம் கட்சி ஆரம்பிக்க வாய்ப்புள்ளது: கராத்தே தியாகராஜன்

நடிகர் ரஜினிகாந்த் ஜூன் மாதத்தில் கட்சி ஆரம்பிக்க வாய்ப்புள்ளதாக முன்னாள் சென்னை மேயர் கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :10 பிப்ரவரி 2020, 9:26 am

DIN

நடிகர் ரஜினிகாந்த் ஜூன் மாதத்தில் கட்சி ஆரம்பிக்க வாய்ப்புள்ளதாக முன்னாள் சென்னை மேயர் கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது,

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மே அல்லது ஜூன் மாதம் புதிய கட்சி ஆரம்பிக்க உள்ளார். அதன்பிறகு தமிழகத்தில் திமுக மற்றும் ரஜினியின் புதிய கட்சியைச் சார்ந்து தான் இருக்கும். தமிழக அரசியலில் ஸ்டாலின் அல்லது ரஜினிகாந்த் என்ற நிலை உருவாகும் என்று தெரிவித்தார்.

முன்னதாக, நடிகர் ரஜினிகாந்த் வரும் ஏப்ரல் மாதத்தின் போது புதிய கட்சி ஆரம்பித்து, ஜூன் மாதத்தில் மாநாடு நடத்த வாய்ப்புள்ளது. அதிமுக, பாஜக மற்றும் பாமக இடம்பெற்றுள்ள கூட்டணியில் இணைந்து தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை சந்திப்பார் என்பது போன்ற தகவல்கள் ஞாயிற்றுக்கிழமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.