ரஜினியுடன் கூட்டணியா? - ராமதாஸ் பதில்
நடிகர் ரஜினிகாந்த் முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும்; அதன்பின்னர் அவருடன் கூட்டணி வைப்பது குறித்து பதில் சொல்வதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


நடிகர் ரஜினிகாந்த் முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும்; அதன்பின்னர் அவருடன் கூட்டணி அமைப்பது குறித்து பதில் கூறுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் வருகிற ஏப்ரல் மாதம் கட்சித் தொடங்குவார் எனவும் அவரது தலைமையிலான கூட்டணியில் பாமக இணையும் என்றும் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ராமதாஸ், ரஜினியுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக தமிழருவி மணியன் கூறியதற்கு முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை.
ரஜினி முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும்; அதன்பின்னர் அவருடன் கூட்டணி வைப்பது குறித்து யோசிக்கலாம்.
ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என்பதை அரசுக்கு கோரிக்கையாக வைப்பதாக அவர் தெரிவித்தார்.
மாநில அரசு பணிகளில் இடஒதுக்கீடு கட்டாயம் அல்ல என்பது தவறானது. அரசுப்பணிகளில் இட ஒதுக்கீடு அவசியம்' என்று பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...