முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

இறந்த நாய்க்குப் பிறந்த ஐந்து குட்டிகள்!

வேலூரில் சாலை விபத்தில் அடிபட்டு இறந்த நாயின் வயிற்றில் இருந்து 5 குட்டிகள் உயிருடன் மீட்கப்பட்டன. 

News image
Updated On :20 பிப்ரவரி 2020, 5:50 am

DIN

வேலூரில் சாலை விபத்தில் அடிபட்டு இறந்த நாயின் வயிற்றில் இருந்து 5 குட்டிகள் உயிருடன் மீட்கப்பட்டன. 

வேலூர் மக்கான் சிக்னல் அருகே இரு தினங்களுக்கு முன்பாக தெருநாய் ஒன்று சாலையை கடக்க முயன்றபோது, எதிரே வாகனம் நாயை அடித்துவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதனால் பலத்த அடிபட்ட நாய், உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தது. இதனைக் கவனித்த அப்பகுதியைச் சேர்ந்த தண்டபாணி என்பவர் உடனடியாக நாயை மீட்டு அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். 

மருத்துவமனையில் பணியில் இருந்த கால்நடை மருத்துவர் ரவிசங்கர் உடனடியாக நாய்க்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். எனினும் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் நாய் உயிரிழந்தது. 

இதன்பின்னர் நாயின் வயிற்றில் குட்டி இருந்ததை கண்டறிந்த மருத்துவர், துரிதமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு வயிற்றில் இருந்த 5 குட்டிகளையும் உயிருடன் மீட்டார். பின்னர் கடையில் பால்பாட்டில் வாங்கி வந்து நாய்க்கு உணவளித்தார். தற்போது 5 குட்டிகளும் பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. 

Story image

இதுகுறித்து மருத்துவர் ரவிசங்கர் கூறுகையில், 'நாய் உயிரிழந்த பின்னர் ஒரு சில நிமிடங்களில் ஆக்சிஜன் கிடைக்காமல் குட்டிகளும் உயிரிழந்துவிடும் என்பதால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்தேன். தற்போது குட்டிகள் நலமாக இருக்கின்றன' என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.