தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சி.ஏ.ஏ.வுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் பேரணி: எச்.ராஜா தகவல்

என்.ஆர்.சி., என்.பி.ஆர்., சி.ஏ.ஏ. திட்டங்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் பாஜக சார்பில் விரைவில் பேரணி நடைபெறும் என பாஜக தேசியச் செயலர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். 

News image
Updated On :24 பிப்ரவரி 2020, 10:14 am

DIN

என்.ஆர்.சி., என்.பி.ஆர்., சி.ஏ.ஏ. திட்டங்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் பாஜக சார்பில் விரைவில் பேரணி நடைபெறும் என பாஜக தேசியச் செயலர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். 

விழுப்புரத்தில் திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசியச்  செயலர் எச்.ராஜா கூறியதாவது:

குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக பலர் மத பதற்றத்தை உருவாக்கும் வகையில் வேண்டுமென்றே கருத்து தெரிவித்து வருகிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவர முயற்சித்த திட்டங்களை இன்று அவர்களே எதிர்க்கிறார்கள்.

ப.சிதம்பரம் அறிவுடையவராக எனக்கு தெரியவில்லை. அவர் கலவர சிந்தனையோடு செயல்படுகிறார்.

தமிழகத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்துகிறார்கள். காவல்துறையினரின் அனுமதியின்றி விநாயகர் சதுர்த்தி வழிபாடு நடைபெற வேண்டும்.

100 கோடி இந்துக்கள் ஒத்துழையாமை இயக்கம் நடத்தினால் என்ன ஆகும் என்பதை செங்கோட்டையில் நடந்த விநாயகர் சதுர்த்தி வழிபாட்டில் நிரூபித்துள்ளோம்.

நடிகர் விஜய்க்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது அவர்களது விருப்பம்.

என்.ஆர்.சி., என்.பி.ஆர்., சி.ஏ.ஏ. திட்டங்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் பாஜக சார்பில் விரைவில் பேரணி நடைபெறும் என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.