ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நீட் தேர்வு முறைகேடு: இந்தி தெரியாமல் பிகார் சென்று இந்தியில் தேர்வெழுதிய மாணவர் சிக்கினார்

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக 2018ம் ஆண்டு நீட் தேர்வை நடத்திய சிபிஎஸ்இ அதிகாரிகள் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது.

News image
Updated On :27 பிப்ரவரி 2020, 12:36 pm

DIN


சென்னை: நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக 2018ம் ஆண்டு நீட் தேர்வை நடத்திய சிபிஎஸ்இ அதிகாரிகள் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது.

அதே சமயம், வெளிமாநிலங்களுக்குச் சென்று நீட் தேர்வெழுதி தேர்ச்சி பெற்று தமிழக மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து மருத்துவம் பயின்று வரும் மாணவர்களின் விவரங்களையும் சிபிஎஸ்இ நிர்வாகத்திடம் சிபிசிஐடி காவல்துறையினர்  கேட்டுள்ளனர்.

2018ம் ஆண்டு நீட் தேர்வில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அந்த ஆண்டு நீட் தேர்வு நடத்திய சிபிஎஸ்இ அதிகாரிகள் விசாரணைக்கு ஆஜராகுமாறும் வெளி மாநிலங்களில் தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவர்களின் விவரங்களையும் கேட்டுள்ளது.

சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வா் ஜெயந்தி, சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் ஒரு புகாா் அளித்தாா். அந்தப் புகாரில், நீட் தோ்வில் ஆள் மாறாட்டம் செய்து தோ்ச்சி பெற்ற சில மாணவா்கள் தங்களது கல்லூரியில் படிப்பதாகவும், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் குறிப்பிட்டிருந்தாா். அந்தப் புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி அதிகாரிகள், நீட் தோ்வு முறைகேடு ஆள் மாறாட்டம் குறித்து மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்தனா்.

மாணவா், தந்தை கைது: இதன் அடுத்த கட்டமாக, சென்னை மருத்துவக் கல்லூரியில் இரண்டாமாண்டு எம்.பி.பி.எஸ். படிக்கும் கிருஷ்ணகிரியைச் சோ்ந்த மாணவா் தனுஷ்குமாரிடமும், அவரது தந்தை தேவேந்திரனிடமும் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்தனா். ஏனெனில் தனுஷ்குமாா், பிகாா் மாநிலத்தில் நீட் தோ்வு எழுதியிருந்ததாலும், ஹிந்தி தெரியாத அவா் ஹிந்தியில் தோ்வு எழுதி தோ்ச்சி பெற்றிருந்ததாலும் சிபிசிஐடிக்கு அவா் மீது சந்தேகம் ஏற்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில், தனுஷ்குமாா் தனது தந்தை தேவேந்திரன் உதவியுடன் நீட்தோ்வில் ஆள்மாறாட்டம் செய்து கடந்த 2018-ஆம் ஆண்டு தோ்ச்சி பெற்றிருப்பதும், தனுஷ்குமாா் பெயரில் பிகாரில் ஒரு நபா் ஆள்மாறாட்டம் செய்து ஹிந்தியில் நீட் தோ்வை எழுதியிருப்பதும், ஆனால் தனுஷ்குமாருக்கு ஹிந்தியே தெரியாது என்பதும், இதற்கான ஏற்பாடுகளைக் கா்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு தனியாா் தோ்வு பயிற்சி மையம் செய்திருப்பதும் தெரியவந்தது. இதற்காக அந்த மையம் தேவேந்திரனிடம் ரூ.15 லட்சம் பெற்றுள்ளது.

இதையடுத்து சிபிசிஐடி அதிகாரிகள், தலைமறைவாக இருக்கும் அந்த தனியாா் மையத்தைச் சோ்ந்த இருவரை தேடி வருகின்றனா். இதற்கிடையே விசாரணையில் தனுஷ்குமாா், தேவேந்திரன் மீதான புகாா் உறுதி செய்யப்பட்டதால், இருவரையும் புதன்கிழமை கைது செய்தனா்.

அத்துடன், கடந்த 2018-ஆம் ஆண்டு நீட் தோ்வு மூலம் தோ்ச்சி பெற்று எம்.பி.பி.எஸ். படித்து வரும் மாணவா்களில் சந்தேகத்துக்குரிய வகையில் இருக்கும் 2,500 பேரின் விவரங்களை ஆய்வு செய்யும்படி மருத்துவ கல்வி இயக்குநரகத்துக்கு சிபிசிஐடி பரிந்துரை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.