உதகையில் தொடரும் குளிர்: குறைந்தபட்ச வெப்பநிலை பூஜ்யம் டிகிரி (புகைப்படங்கள்)
உதகையில் தொடர்ந்து கடுங்குளிர் நிலவுகிறது. குறைந்த பட்ச வெப்பநிலை பூஜ்யம் டிகிரியாக பதிவாகியுள்ளது.


உதகையில் தொடர்ந்து கடுங்குளிர் நிலவுகிறது. குறைந்த பட்ச வெப்பநிலை பூஜ்யம் டிகிரியாக பதிவாகியுள்ளது.
_.jpeg)
நீலகிரியில் இவ்வாண்டு பனிக்காலம் நவம்பர் மாதத்திற்கு பதிலாக டிசம்பர் மாதத்தில் தான் தொடங்கியது அதிலும் உறைபனி இல்லாத மாதமாகவே இருந்தது. நீர்ப்பனி மட்டுமே கொட்டியது. டிசம்பர் மாதத்தில் குறைந்த பட்ச வெப்பநிலை 6 டிகிரியாக மட்டுமே பதிவானது.
_.jpeg)
இந்நிலையில் ஜனவரி மாதம் தொடங்கியதிலிருந்தே உறைபனி கொட்டத்தொடங்கி நாளுக்கு நாள் குளிரின் தாக்கம் அதிகரித்து வந்தது. இதில் வியாழக்கிழமை காலையில் உதகையில் குறைந்தபட்ச வெப்பநிலை பூஜ்யம் டிகிரியாக பதிவானது.

இதன் காரணமாக புல்வெளி பகுதிகளில் வெள்ளைப் போர்வை போர்த்தியதை போல பனிப்படலம் காணப்பட்டது. கடும் குளிர் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் உதகையில் குவிந்துள்ள சுற்றுலாப் பயணிகள் இந்த குளிரை மகிழ்ச்சியோடு அனுபவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...