விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கும்மிடிப்பூண்டி அருகே சாலை விபத்தில் இருவர் பலி

கும்மிடிப்பூண்டி அருகே தடுப்புச் சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

News image
Updated On :16 ஜனவரி 2020, 6:35 am

DIN

கும்மிடிப்பூண்டி அருகே தடுப்புச் சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கவரைப்பேட்டை முதல் பெத்திக்குப்பம் வரை மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு ஆண்டாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அலட்சியத்தால் இப்பணிகள் பாதிக்கப்பட்டு விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் சென்னை அயனாவரத்தைச் யுகேஷ் குமார் (29), ரெட்டேரியைச் சேர்ந்த பீபின் (29), கொளத்தூரைச் சேர்ந்த யுவராஜ் (29), சித்திக் (31) ஆகிய 4 பேரும் காரில் ஆந்திரா சென்று கொண்டிருந்தனர். 

Story image

அப்போது மேம்பாலம் அருகே தடுப்புச் சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே யுகேஷ்குமார், பீபின் ஆகியோர் உயிரிழந்தனர். 

இதையடுத்து அங்கு விரைந்த போலீஸார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த இருவரையும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.