கும்மிடிப்பூண்டி ஒன்றியம் பெத்திக்குப்பம் ஊராட்சியின் 4வது வார்டு உறுப்பினர் லோகநாதன் அப்பகுதியில் முக்கிய இடத்தில் தகவல் பலகை அமைத்து மக்கள் பணியாற்றி வருகிறார்.
கும்மிடிப்பூண்டி ஒன்றியம் பெத்திக்குப்பம் ஊராட்சியின் 4வது வார்டு உறுப்பினர் சமூக ஆர்வலர் லோகநாதன். பெத்திக்குப்பம் பகுதியில் பல்வேறு மக்கள் பணிகளில் இவர் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், இவர் ஊராட்சியில் மக்கள் அதிகமாக கூடும் இரு இடங்களில் தகவல் பலகை அமைத்துள்ளார். இதில் அந்த வார்டில் எந்த பணி, எந்த தேதியில் நடைபெறுகிறது என்ற விபரத்தை அவ்வப்போது குறிப்பிடுகிறார்.
மேலும் ஊராட்சியில் நடைபெறும் அரசு விழாக்கள், அரசு திட்டங்கள் குறித்தும் தகவல்களை அதில் குறிப்பிட்டு வைக்கிறார். அத்தோடு அந்த தகவல் பலகையில் பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கவும் இடம் ஒதுக்கி உள்ளார்.
வார்டு உறுப்பினர் லோகநாதனின் இந்த செயல் அப்பகுதி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இது குறித்து வார்டு உறுப்பினர் லோகநாதனிடம் கேட்ட போது பதவியை பொருப்பாக நினைத்தே தேர்தலில் போட்டியிட்ட நிலையில், வெளிப்படைத்தன்மையான மக்கள் பணியை பொதுமக்கள் அறியவும், ஊராட்சியின் நிகழ்வுகள், அரசின் நலதிட்டங்களை பொதுமக்கள் அறிந்துகொள்ளவும் இந்த தகவல் பலகையை ஏற்படுத்தி உள்ளதோடு, பொதுமக்கள் கூறும் குறைகளை ஊராட்சித் தலைவர், துணைத் தலைவரை அணுகி விரைந்து சரி செய்வேன் என்றும் உறுதியளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மண்டாடி தமிழ்ப் புத்தாண்டு போஸ்டர்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோஹித் சர்மா புதிய சாதனை!

ஆஷா போஸ்லே மறைவுக்கு இரங்கல் தெரிவித்த ஆஸி. கிரிக்கெட் வீரர்!

அதீத பேட்டரி திறன்... இன்ஃபினிக்ஸ் நோட் 60 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


