சாத்தூர் அருகே மேட்டமலை கிராமத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குடியரசு தின விழாவை புறக்கணித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலை கிராமத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி அரசு கலைக் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் 30க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் மற்றும் 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
தேசிய குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் சிறப்பான முறையில் கொண்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் சாத்தூர் அரசு கலைக் கல்லூரியில் குடியரசு தினமான இன்று கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் ஒருவரும் வராததால் கல்லூரி வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.

பின்னர் 10.30 மணிக்கு மேல் ஒரு பேராசிரியர் மற்றும் இரண்டு பணியாளர்கள் வந்து தேசியக் கொடியை ஏற்றிச் சென்றனர்.
மாணவர்களுக்கு எவ்வித அழைப்பும் விடுக்கப்படாததால் மாணவர்கள் குடியரசு தின விழாவிற்கு வரவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், குடியரசு தினத்தை கல்லூரி மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் புறக்கணித்தது சாத்தூர் பகுதியில் சமூக ஆர்வலர்களிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுவை, கேரளம், அஸ்ஸாம் தேர்தல்! பிற்பகல் 1 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் மனைவியுடன் வந்து வாக்களிப்பு!
திமுகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர அதிகாரிகள் நினைக்கிறார்கள்; அது நடக்காது!

🔴கேரளம்: இதுவரை நடந்திராத தேர்தல் சாதனை என்ன? செய்திகள் உடனுக்குடன்!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


