ஈரானில் சிக்கிய 687 பேரை மீட்டு தூத்துக்குடி வந்தடைந்தது ஐ.என்.எஸ்.ஜலஸ்வா கப்பல்
ஈரான் நாட்டிலிருந்து 687 இந்தியர்களுடன் ஐ.என்.எஸ்.ஜலஸ்வா கப்பல் இன்று தூத்துக்குடி துறைமுகம் வந்தடைந்தது.


ஈரான் நாட்டிலிருந்து 687 இந்தியர்களுடன் ஐ.என்.எஸ்.ஜலஸ்வா கப்பல் இன்று தூத்துக்குடி துறைமுகம் வந்தடைந்தது.
கரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்நேரத்தில் வேலை, கல்வி, சுற்றுலா உள்ளிட்ட காரணங்களுக்காக பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை சமுத்திர சேது என்ற திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த திட்டத்தின்படி இலங்கையில் சிக்கித்தவித்த தமிழர்கள் உள்பட இந்தியர்கள் 713 பேர் முதற்கட்டமாகவும், இரண்டாம் கட்டமாக 700 பேரும் ஐ.என்.எஸ். ஜலஸ்வா கப்பல் மூலமாகத் தாயகம் அழைத்து வரப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து மூன்றாவது கட்டமாக இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ் ஐராவத் மூலம் மாலத்தீவிலிருந்த 198 பேர் அழைத்து வரப்பட்டனர். இந்த சூழலில் ஈரான் நாட்டிலிருந்து நாடு திரும்ப முடியாமல் தவித்த 687 இந்தியர்கள் ஐ.என்.எஸ்.ஜலஸ்வா கப்பல் மூலம் தாயகம் அழைத்து வரப்பட்டனர். ஈரான் நாட்டின் பந்தர்அபாஸ் துறைமுகத்திலிருந்து கடந்தசில நாட்களுக்கு முன்னர் கிளம்பிய ஐ.என்.எஸ்.ஜலஸ்வா கப்பல் இன்று தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் வந்தடைந்தது.
இந்த கப்பலில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 530 உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் தாயகம் வந்தடைந்தனர். மாவட்டம் வாரியாக கேரளா-35, கன்னியாகுமரி - 530, தூத்துக்குடி - 33, நாகைப்டிணம் - 27, திருநெல்வேலி - 26, ராமநாதபுரம் - 16, விழுப்புரம் - 8, கூடலூர் - 8, அரியலூர் - 1, காஞ்சிபுரம் - 1, தஞ்சாவூர் - 1, மயிலாடுதுறை - 1, என மொத்தம் 687 பேர் வந்துள்ளனர்.
இவர்கள் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, குடியுரிமை அதிகாரிகள் சோதனையைத் தொடர்ந்து அரசு பேருந்துகள் மூலம் தங்களது சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இவர்கள் தங்களது வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.
இவர்கள் பாதுகாப்பாக செல்வதைத் துறைமுகத்தில் வந்து பார்வையிட்ட தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது,
உலகில் எந்த நாட்டிலும் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க தமிழக அரசு மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுக்கும் என்ற அவர், அரசு 24 மணி நேரமும் செயல்பட்டு கரோனா வைரஸை கட்டுப்படுத்தி வருகிறது. தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கத்திற்கு மாநில அரசின் பங்கு மகத்தானது 2018ம் ஆண்டில் இடம் கையகப்படுத்தி அதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிட்டார்.
கனிமொழி 2019ல் தான் தேர்ந்தெடுக்கப்பட்டார். தூத்துக்குடி விமான நிலையம் விரைவில் பன்னாட்டு விமான நிலையமாக மாறும். சாத்தான்குளத்தில் சரியான விசாரணை நடைபெற வேண்டும் என்பதற்காகத்தான் சிபிஐ விசாரணைக்கு தமிழக முதல்வர் உத்தரவிட்டார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி, தூத்துக்குடி துறைமுக தலைவர் டி.கே. ராமச்சந்திரன் உள்ளிட்டவர்கள் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...