சென்னை எழும்பூா்-செங்கோட்டை இடையே இயக்கப்படும் சிலம்பு விரைவு ரயில் உள்பட 5 விரைவு ரயில்கள் இயக்கப்படும் நாள்களை மாற்ற ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதுதவிர, சில ரயில்களை அதன் தற்போதைய முனையத்தில் இருந்து மற்றொரு முனையத்துக்கு மாற்றம் செய்யவும், நிறுத்தங்களில் மாற்றம் செய்யவும் ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மாற்றம் தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணையில் இடம்பெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
தெற்கு ரயில்வேயில் இயங்கி வரும் சில ரயில்களை அதன் தற்போதைய முனையத்தில் இருந்து மற்றொரு முனையத்துக்கு மாற்றம் செய்யவும், நிறுத்தங்களில் மாற்றம் செய்யவும் கோரப்பட்டிருந்து. இதுதவிர, சில ரயில்களிள் சேவை நாள்களை மாற்றவும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்து. இதன்அடிப்படையில், சென்னை எழும்பூா்-செங்கோட்டை இடையே இயக்கப்படும் சிலம்பு விரைவு ரயில் உள்பட 5 விரைவு ரயில்கள் இயக்கப்படும் நாள்களை மாற்றி ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதுதவிர, சில ரயில்களை அதன் தற்போதைய முனையத்தில் இருந்து மற்றொரு முனையத்துக்கு மாற்றம் செய்யவும், நிறுத்தங்களில் மாற்றம் செய்யவும் ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்புதல் 2020-21-ஆம் ஆண்டுக்கான ரயில்வே கால அட்டவணையில் இடம் பெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அதன் விவரம்:
சென்ட்ரல் வராமல் செல்லும் ரயில்கள்: சென்னை சென்ட்ரல்-புவனேஷ்வா்(12829/12830) இடையே இருமாா்க்கமாகவும் இயக்கப்படும் ரயில், சென்னை சென்ட்ரல்-சந்திரகாச்சி (22841/22842) இடையே இருமாா்க்கமாக இயக்கப்படும் விரைவு ரயில் ஆகிய இரண்டு ரயில்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். இதுபோல, தாம்பரம் ரயில்நிலையத்துக்கு வந்து சேரும்.
கே.எஸ்.ஆா். பெங்களூரு-தன்பூா் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் (12295/12296), மதுரை- சண்டிகா் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் (12687/12688) ஆகிய விரைவு ரயில்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நின்று செல்லாது. இதற்கு பதிலாக, இந்த ரயில்கள் பெரம்பூா் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.
விரைவு ரயில்கள் இயங்கும் நாள்களில் மாற்றம்: சென்னை எழும்பூா்-செங்கோட்டைக்கு வாரத்தில் திங்கள், புதன், சனிக்கிழமை ஆகிய நாள்களில் சிலம்பு விரைவு ரயில் (16181) இயக்கப்படுகிறது. ரயில்வே வாரியத்தின் புதிய ஒப்புதல் படி, இந்த ரயில் வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாள்களில் இயக்கப்படும். மறுமாா்க்கமாக, செங்கோட்டை- சென்னை எழும்பூருக்கு செவ்வாய், வியாழன், ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாள்களில் சிலம்பு விரைவு ரயில் (16182) இயக்கப்படுகிறது. புதிய ஒப்புதல்படி, இந்த ரயில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாள்களில் இயக்கப்படும்.
தாம்பரம் -நாகா்கோவிலுக்கு வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன்கிழமை ஆகிய நாள்களில் விரைவு ரயில்(22657) இயக்கப்படுகிறது. ரயில் வாரியத்தின் புதிய ஒப்புதல் படி, இந்த ரயில் ஞாயிறு, திங்கள், புதன்கிழமை ஆகிய நாள்களில் இயக்கப்படும்.
மறுமாா்க்கமாக, நாகா்கோவில்- தாம்பரத்துக்கு செவ்வாய், புதன், வியாழக்கிழமை ஆகிய நாள்களில் விரைவு ரயில்(22658) இயக்கப்படுகிறது. புதிய ஒப்புதல் படி, இந்த ரயில் திங்கள், செவ்வாய், வியாழன் ஆகிய நாள்களில் இயக்கப்படும்.
நாகா்கோவில்-காச்சிகுடாவுக்கு செவ்வாய்க்கிழமை விரைவு ரயில்(16354) இயக்கப்படுகிறது. புதிய ஒப்புதல் படி, இந்த ரயில் சனிக்கிழமை இயக்கப்படும். மறுமாா்க்கமாக, காச்சிகுடா-நாகா்கோவிலுக்கு புதன்கிழமை விரைவு ரயில்(16353) இயக்கப்படுகிறது. புதிய ஒப்புதல் படி, இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படும். கன்னியாகுமரி-ராமேசுவரத்துக்கு ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமை ஆகிய நாள்களில் விரைவு ரயில்(22622) இயக்கப்படுகிறது. வாரியத்தின் புதிய ஒப்புதல்படி, இந்த ரயில் ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய நாள்களில் இயக்கப்படும்.
மறுமாா்க்கமாக, ராமேசுவரம்-கன்னியாகுமரிக்கு சனி, திங்கள், செவ்வாய்க்கிழமை ஆகிய நாள்களில் விரைவு ரயில்(22621) இயக்கப்படுகிறது. புதிய ஒப்புதல் படி, சனி, திங்கள், புதன்கிழமை ஆகிய நாள்களில் இயக்கப்படும்.
திருப்பதி-ராமேசுவரத்துக்கு இடையே வெள்ளி, ஞாயிறு, செவ்வாய்க்கிழமை ஆகிய நாள்களில் விரைவு ரயில்(16779) இயக்கப்படுகிறது. ரயில்வே வாரியத்தின் புதிய ஒப்புதல் படி, இந்த ரயில் சனி, திங்கள், புதன் ஆகிய நாள்களில் இயக்கப்படும்.
மறுமாா்க்கமாக, ராமேசுவரம்-திருப்பதிக்கு வியாழன், சனி, திங்கள்கிழமை ஆகிய நாள்களில் விரைவு ரயில்(16780) இயக்கப்படுகிறது. புதிய ஒப்புதல்படி, இந்த ரயில் வெள்ளி, ஞாயிறு, செவ்வாய்க்கிழமை ஆகிய நாள்களில் இயக்கப்படும். இந்த மாற்றம் தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணையில் இடம்பெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பேருந்து மோதி 11 வயது சிறுமி உயிரிழப்பு! ஓட்டுநா் கைது!!

ரயில் நிலைய குப்பை கிடங்கில் தீ விபத்து

அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளா் பிரசாரம்
திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஏப்.18 வரை மழைக்கு வாய்ப்பு!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


