சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

என்எல்சி கொதிகலன் வெடித்து விபத்து: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு

என்எல்சி தீ விபத்தில் காயம் அடைந்த தொழிலாளி ஒருவர்  திங்கட்கிழமை காலை உயிரிழந்தார். இதனால் உயிரிழப்பு 10 ஆக உயர்ந்துள்ளது.

News image
என்எல்சி கொதிகலன் வெடித்து விபத்து
Updated On :6 ஜூலை 2020, 5:53 am

DIN


நெய்வேலி: என்எல்சி தீ விபத்தில் காயம் அடைந்த தொழிலாளி ஒருவர்  திங்கட்கிழமை காலை உயிரிழந்தார். இதனால் உயிரிழப்பு 10 ஆக உயர்ந்துள்ளது.

கடலூர் மாவட்டம், நெய்வேலி என்எல்சி இந்தியா நிலையத்தின் 2-ஆவது அனல்மின் நிலையத்தில் 1-ஆம் தேதி கொதிகலன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 6 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். காயம் அடைந்த 17 பேர் மருத்துவமனயில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் துணை தலைமை பொறியாளர் க.சிவகுமார் வெள்ளிக்கிழமை  உயிரிழந்தார்.  இந்நிலையில்,  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விருத்தாசலம் வட்டம், தொப்புளிகுப்பம் கிராமம் கோபால் மகன் செல்வராஜ்(ஒப்பந்தத்தொழிலாளி), இளநிலை பொறியாளர் ரவிசந்திரன் ஆகியோர்  ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.

இதன் தொடர்ச்சியாக ஃபோர்மேன் எம்.வைத்தியநாதன் திங்கட்கிழமை காலை உயிரிழந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.