தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

அறந்தாங்கி அருகே வீடு இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிர் தப்பினர் 

ஆவுடையார்கோவில் அருகே பூங்குடி கிராமத்தில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை காற்றுடன் பெய்த கனமழையால் வீடு இடிந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக 4 பேர் உயிர் தப்பினர்.

News image

அறந்தாங்கி அருகே இடிந்து விழுந்த வீடு

Updated On :10 ஜூலை 2020, 5:48 am

ஆவுடையார்கோவில் அருகே பூங்குடி கிராமத்தில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை காற்றுடன் பெய்த கனமழையால் வீடு இடிந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக 4 பேர் உயிர் தப்பினர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே உள்ள பூங்குடி கிராமத்தில் டீக்கடை எதிரில் மீமிசல் சாலை அருகே வசித்து வந்த கருப்பூரை சேர்ந்த குடியார் மகன் மாரிமுத்து - சக்தி தம்பதியினர் ஓட்டு வீட்டில் வசித்து வந்தனர். இன்று அதிகாலை காற்றுடன் பெய்த கனமழையால் திடீரென வீடு இடிந்து தரைமட்டம் ஆனது. இதில் சுமார் 1 லட்சம் மதிப்புள்ள மரகட்டில் டீவி, மிக்சி உட்பட அனைத்து பொருள்களும் நாசமானது. 

மழை மற்றும் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் வீட்டில் உள்ள நான்கு பேரும் வீட்டின் முன்பு உள்ள அறையில் தூங்கினர் அதிர்ஷ்டவசமாக வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மாரிமுத்து, சக்தி மற்றும் அவர்களின் பிள்ளைகளான ராஜேஸ்வரன் (10), தர்ஷன் (7) ஆகியோர் உயிர் தப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.