ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

இயக்குநர் பாரதிராஜாவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் வாழ்த்து

இயக்குநர் பாரதிராஜாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார். 

News image
Updated On :17 ஜூலை 2020, 3:08 pm

இயக்குநர் பாரதிராஜாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார். 

இயக்குநர் பாரதிராஜா இன்று தனது 80ஆவத பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதற்காகச் சமூகவலைத்தளங்களில் அவருக்குப் பலரும் வாழ்த்துகளைக் கூறியுள்ளார்கள். இயக்குநர் பாரதிராஜாவுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கமல்ஹாசன், மணிரத்னம், சேரன், பாலா, வைரமுத்து உள்ளிட்டோர் கடிதம் எழுதியுள்ளார்கள். 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி மு. பழனிசாமி இன்று திரைப்பட இயக்குநர் பாரதிராஜா 79 வயது நிறைவு பெற்று 80வது வயதில் அடியெடுத்து வைத்தமைக்காக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்கள். அதற்கு திரைப்பட இயக்குநர் பாரதிராஜா தமிழ்நாடு முதல்வருக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.