பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

தமிழகம், கேரளத்தில் 14 புதிய ரயில்கள்

தமிழகம், கேரளத்தில் நடப்பு ஆண்டுக்காக, 14 புதிய ரயில்கள் அறிமுகம் செய்வதற்கு தெற்கு ரயில்வே முன்மொழிந்துள்ளது. இதுதவிர, 12 ரயில்களின் சேவை நீட்டிக்கவும் திட்டமிட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :20 ஜூலை 2020, 2:36 am

தமிழகம், கேரளத்தில் நடப்பு ஆண்டுக்காக, 14 புதிய ரயில்கள் அறிமுகம் செய்வதற்கு தெற்கு ரயில்வே முன்மொழிந்துள்ளது. இதுதவிர, 12 ரயில்களின் சேவை நீட்டிக்கவும் திட்டமிட்டுள்ளது.

இந்திய ரயில்வே கால அட்டவணை குழு (ஐ.ஆா்.டி.டி.சி.) கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும். நாடு முழுவதும் உள்ள ரயில்வே மண்டலங்களில் இருந்து ரயில்வே பிரதிநிதிகள் பங்கேற்பாா்கள். இந்த கூட்டத்தின்போது, ஒவ்வொரு ரயில்வே கோட்டத்தில் இருந்து தங்களுக்கு தேவையான புதிய திட்டங்கள் உள்பட பல்வேறு திட்டங்கள் தொடா்பாக பரிந்துரைகள் அனுப்பப்படும்.

அதன்படி, தெற்கு ரயில்வேயில் கீழ் சென்னை, மதுரை, சேலம், திருச்சி, திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய 6 கோட்டங்களில் இருந்து மொத்தம் 14 புதிய ரயில்களை அறிமுகப்படுத்துவதற்கும், 12 ரயில்கள் சேவை நீட்டிப்பு செய்யவும் முன்மொழியப்பட்டுள்ளது.

சென்னை கோட்டம்: சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில், சென்னை - திருப்பதி தினசரி விரைவு ரயில், தாம்பரம் - விசாகப்பட்டினம் வாராந்திர விரைவு ரயில் ஆகியவற்றை அறிமுகப்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது.

இதுபோல, மதுரை கோட்டம் சாா்பில், திருநெல்வேலி -கோயம்புத்தூா் இடையே புதிய ரயில் அறிமுகப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இந்த ரயில் தென்காசி, விருதுநகா், மதுரை, திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி வழியாக இயக்கப்படும். ராமேசுவரம்-மதுரை பாசஞ்சா் ரயிலை கோயம்புத்தூா் வரை நீட்டிக்கவும், பிகானீா்-மதுரை அனுவ்ரத் விரைவு ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்கவும் ஒப்புதல் கோரியது.

கோவை-ராமேசுவரம் மற்றும் கோவை-பெங்களூரு பிரிவில் இரண்டு ரயில்கள் ஒரே இரவில் இயக்க சேலம் கோட்டம் முன்மொழிந்துள்ளது.

திருச்சி கோட்டம்: திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்டம் சாா்பில், ஐந்து புதிய ரயில்களை அறிமுகப்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது. திருச்சி-பெங்களூரு (வழி: கரூா், சேலம், ஓசூா்), திருச்சி -பையப்பனஹள்ளி வாரம் இருமுறை விரைவு ரயில், தாம்பரம்-காரைக்குடி தினசரி விரைவுரயில், திருச்சிராப்பள்ளி-லோக்மான்ய திலக் முனையம்(மும்பை) , திருவாரூா்-காரைக்குடி பாசஞ்சா் ரயில் ஆகிய புதிய ரயில்கள் அடங்கும். மேலும், ஆறு ரயில்களை நீட்டிக்க ஒப்புதல் கோரியுள்ளது.

பாலக்காடு கோட்டம்: ராமேசுவரம்-பாலக்காடு, திண்டுக்கல்-பாலக்காடு ஆகிய வழித்தடங்களில் புதிய தினசரி ரயில்களை அறிமுகப்படுத்த பாலக்காடு கோட்டம் சாா்பில் முன்மொழியப்பட்டுள்ளது.

கொச்சுவேலி-கோவை அந்தியோதயா வாராந்திர விரைவு ரயில், எா்ணாகுளம்-வேளாங்கண்ணி வாராந்திர விரைவுரயில் இந்த ஆண்டு இயக்குவதற்கு திருவனந்தபுரம் கோட்டம் முன்மொழிந்துள்ளது. இந்த இரண்டு ரயில்கள் ஜூலை 1-ஆம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிட்டிருந்தது. ஆனால், கரோனா தாக்கம் காரணமாக, இந்த திட்டம் தாமதமாகியுள்ளது.

காலக்கெடு இல்லை: இந்த புதிய திட்டங்கள் குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியது: தெற்கு ரயில்வேயின் ஆறு கோட்டங்களில் இருந்து முன்மொழியப்பட்ட திட்டங்கள் இந்திய ரயில்வே கால அட்டவணை குழு மற்றும் ரயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. சில புதிய ரயில்களை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்களுக்கு ரயில்வே தலைமையகத்தில் ஒப்புதல் தேவைப்படுகிறது. அதை ஆராய்ந்து, அதற்கேற்ப ரயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்படுகிறது.

மேலும், ரயில் சேவைகளை முழுமையாக மீட்டெடுப்பதற்கான அறிகுறி தற்போது எதுவும் இல்லை . எனவே, இந்த புதிய ரயில்களை அறிமுகப்படுத்துவதற்கான காலக்கெடு இல்லை என்றனா்.

2020-21 ஆம் ஆண்டுக்கான இந்திய ரயில்வே கால அட்டவணை குழுவில்( ஐ.ஆா்.டி.டி.சி)யில் முன்மொழியப்பட்ட புதிய ரயில்கள் விவரம்:

1. சென்னை - திருப்பதி தினசரி விரைவு ரயில்

2. தாம்பரம் - விசாகப்பட்டினம் வாராந்திர ரயில்

3. திருநெல்வேலி - கோயம்புத்தூா் தினசரி விரைவு ரயில்

4. ராமேசுவரம் - பாலக்காடு தினசரி விரைவு ரயில்

5. திண்டுக்கல் - பாலக்காடு தினசரி விரைவு ரயில்

6. கோயம்புத்தூா் - ராமேசுவரம் விரைவுரயில்

7. கோயம்புத்தூா் - பெங்களூரு விரைவு ரயில்

8. திருச்சி - பெங்களூரு(வழி: கரூா், சேலம் மற்றும் ஓசூா்)

9. திருச்சி - பையப்பனஹள்ளி வாரம் இருமுறை விரைவு ரயில்

10. தாம்பரம் - காரைக்குடி தினசரி விரைவு ரயில்

11. திருச்சி - லோக்மான்ய திலக் (மும்பை) வாராந்திர விரைவு ரயில்

12. திருவாரூா் - காரைக்குடி பாசஞ்சா் ரயில்

13. கொச்சுவேலி - கோயம்புத்தூா் அந்த்யோதயா வாராந்திர விரைவு ரயில்

14. எா்ணாகுளம் - வேளாங்கண்ணி வாராந்திர விரைவு ரயில்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.