ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நாராயணத்தேவன் பட்டியில் கனரா வங்கி மூடல்

தேனி மாவட்டம் நாராயணத்தேவன் பட்டியில் உள்ள கனரா வங்கி ஊழியர்கள், 2 பேர்களுக்கு  கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் வங்கி திங்கள்கிழமை மூடப்பட்டது.

News image

நாராயணத்தேவன் பட்டியில் கனரா வங்கி மூடல்

Updated On :20 ஜூலை 2020, 1:03 pm

DIN


கம்பம்: தேனி மாவட்டம் நாராயணத்தேவன் பட்டியில் உள்ள கனரா வங்கி ஊழியர்கள், 2 பேர்களுக்கு  கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் வங்கி திங்கள்கிழமை மூடப்பட்டது.

தேனி மாவட்டம் கம்பம் அருகே நாராயணத்தேவன்பட்டியில் கனரா வங்கி உள்ளது. இங்கு அலுவலர் மற்றும் உதவியாளர் என இரண்டு பேர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கம்பம் வட்டார வளர்ச்சி அலுவலர் மலர்விழி பார்வையிட்டு, தொற்று பரவாமல் கிருமி நாசினி தெளிக்க ஏற்பாடு செய்தார்.

மேலும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட உதவியாளர், வாடிக்கையாளர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்கியுள்ளர், தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் இவர் தொடர்புடைய முதியவர்கள் விபரத்தை ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் பணியாளர்கள் விபரம் சேகரித்து வருகின்றனர்.

இதற்கிடையில் ஜூலை - 26 வரை வங்கியை மூட வட்டார வளர்ச்சி ஆணையர் உத்தரவிட்டதன் பேரில் வங்கிக் கிளை திங்கள் கிழமை முதல் அடைக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.