தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

முதல்வர் முன்னிலையில் 16 தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்து

தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி முன்னிலையில் இன்று (23.7.2020) தலைமைச் செயலகத்தில், தொழில் துறை சார்பில், சென்னை,

News image
முதல்வர் முன்னிலையில் 16 தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்து
Updated On :23 ஜூலை 2020, 9:56 am

DIN


சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி முன்னிலையில் இன்று (23.7.2020) தலைமைச் செயலகத்தில், தொழில் துறை சார்பில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திண்டுக்கல், திருநெல்வேலி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் 16 தொழில் நிறுவனங்கள் தங்கள் புதிய முதலீட்டுத் திட்டங்களை 5,137 கோடி ரூபாய் முதலீட்டில் தமிழ்நாட்டில் துவங்கிட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இத்திட்டங்களின் மூலம், சுமார் 6,555 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை தொடர்ந்து மேம்படுத்திடவும், தொழில்துறையில் தொடர்ந்து முன்னணி மாநிலமாக திகழச் செய்திடவும் தமிழக முதல்வரின் சீரிய வழிகாட்டுதல்களின்படி, தமிழ்நாடு அரசின் தொழில்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

மேலும், புதிய முதலீடுகளை ஈர்க்க தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்நிலைக் குழு அமைத்தது, தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்திட ஏற்படுத்தப்பட்ட நாடுகளுக்கான அமைவுகள், அனுமதிகளை உடனுக்குடன் வழங்க ஒற்றைச் சாளர முறை, உயர்நிலைக் குழு என பல வழிமுறைகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன.

மும்பையைச் சேர்ந்த, ப்ராஜெக்ட்ஸ் டுடே என்ற நிறுவனம், கோவிட் - 19 காலத்திலும், அதாவது கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாதங்களில், அகில இந்திய அளவில் அதிகமான முதலீடுகளை ஈர்த்ததன் மூலம், தமிழ்நாடு, மஹாராஷ்டிரா மாநிலத்தினை பின்னுக்குத் தள்ளி, முதலிடத்தினைப் பிடித்துள்ளது என்று தனது ஆய்வில் குறிப்பிட்டுள்ளது.

இன்று 16 புதிய தொழில் திட்டங்களை, தமிழ்நாட்டில் துவங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், முதல்வர் பழனிசாமி முன்னிலையில் கையெழுத்திடப்பட்டன. இத்திட்டங்கள் மூலம், 5,137 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, சுமார் 6,555 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

தற்போது நிலவிவரும் சூழ்நிலையின் காரணமாக, இந்த 16 திட்டங்களில், 6 திட்டங்களுக்கு நேரடியாகவும், 10 திட்டங்களுக்கு காணொலிக் காட்சி மூலமாகவும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

செங்கல்பட்டு மாவட்டம், சிறுசேரியில், 2300 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 1000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Adani Enterprises Limited நிறுவனத்தின், தகவல் தரவு மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

காஞ்சிபுரம் மாவட்டம், சிப்காட் வல்லம் - வடகால் தொழிற்பூங்காவில், Super Auto Forge நிறுவனம், 500 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 800 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Forged steel and Aluminium parts உற்பத்தி செய்யும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

காஞ்சிபுரம் மாவட்டம், சிப்காட் வல்லம் - வடகால் தொழிற்பூங்காவில் உள்ள, Airflow Equipments நிறுவனம், 320 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், போக்குவரத்து உபகரணங்கள் உற்பத்தி செய்யும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம். மின்சார பைக்குகள் (E-Bike) உற்பத்தி செய்யும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் என மொத்தம், 16 திட்டங்களின் மூலம், தமிழ்நாட்டிற்கு 5,137 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, சுமார் 6,555 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

அதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் பழனிசாமி, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் investingintamilnadu.com என்ற புதிய இணையதளத்தினை துவக்கி வைத்தார்கள். முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பினை முற்றிலும் பூர்த்தி செய்திடும் வகையில், துறைசார் கவனம், மண்டல தொலைதொடர் திட்டம், ஏற்றுமதி மேம்பாடு போன்ற சிறப்பம்சங்களை உள்ளடக்கி, இந்த இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.