திருச்செந்தூரில் சாலைப் பணியை விரைந்து முடிக்க அரசுக்கு அஞ்சல் அனுப்பிய பொதுமக்கள்
திருச்செந்தூரில் கிடப்பில் போடப்பட்ட சாலையமைக்கும் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் அரசுக்கு அஞ்சல் அட்டை அனுப்பி வைத்தனர்.


திருச்செந்தூரில் கிடப்பில் போடப்பட்ட சாலையமைக்கும் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் அரசுக்கு அஞ்சல் அட்டை அனுப்பி வைத்தனர்.
திருச்செந்தூர் சிறப்பு நிலை பேரூராட்சிக்குச் சொந்தமான ரதவீதி சாலைகள் மற்றும் உட்தெருக்களில் புதியதாக சிமெண்ட் சாலைகள் அமைக்க என மொத்தம் ரூ. 2.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
முதற்கட்டமாக தெற்குரத வீதியில் புதிய சாலையமைக்கும் பணி கடந்த ஜுன் 5-ம் தேதி தொடங்கியது. இதில் முதற்கட்டமாக சாலைகளை பொக்லைன் இயந்திரம் கொண்டு ஆழப்படுத்தும் பணி நடைபெற்றது. அப்போது ஏற்கனவே சாலையின் கீழே பதிக்கப்பட்டிருந்த புதை சாக்கடைத்திட்டக்குழாய்கள் மற்றும் சில இடங்களில் குடியிருப்புகளுக்குச் செல்லும் குடிநீர் விநியோக குழாய்களும் சேதமடைந்தன.
அப்போது குடியிருப்புவாசிகள் புதைசாக்கடைத் திட்டத்திற்கு அனுப்புதல் கட்டணம் செலுத்தினால் தான் உடைந்த குழாய்களை சீரமைத்து விட்டு சாலைப்பணியை தொடர முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் ஏற்கெனவே கரோனா பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்துள்ள மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதனால் சாலை போடும் பணி கிடப்பில் போடப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் குடியிருப்புவாசிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் கிடப்பில் போடப்பட்ட சாலையமைக்கும் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி தெற்குரதவீதி பொதுமக்கள் வீடுதோறும் தங்கள் கோரிக்கையை அஞ்சல் அட்டையில் எழுதி பேரூராட்சி அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...