சங்கங்களை இணைய வழியில் பதிவு செய்யும் வசதியைப் பயன்படுத்த வேண்டுமென பதிவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, பதிவுத் துறை தலைவா் ஜோதி நிா்மலாசாமி புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு சங்கப் பதிவுச் சட்டத்தின்கீழ், சங்கங்கள் மாவட்டப் பதிவாளரால் பதிவு செய்யப்பட்டு உரிய பதிவுச் சான்று வழங்கப்படுகிறது. சங்கங்கள் பதிவு தொடா்பான அனைத்து நடைமுறைகளும் கணினி மயமாக்கப்பட்டுள்ளன.
இதில், அனைத்து அம்சங்களையும் இணைய வழியில் அனுப்பும் வகையில் மென்பொருள் மேம்படுத்தப்பட்டுள்ளது. சங்கத்தினா்கள் தங்களது இருப்பிடம் அல்லது அலுவலகங்களில் இருந்து இணையவழியில் நுழைவினை உருவாக்கி சங்கப் பதிவுக்கான அனைத்துப் படிவங்களையும் பதிவேற்றம் செய்யலாம்.
பதிவேற்றம் செய்யப்படும் ஆவணங்கள் மாவட்டப் பதிவாளரால் பரிசீலிக்கப்பட்டு உரிய முறையில் இருந்தால் சங்கம் பதிவு செய்யப்படும். சான்றினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவேற்றம் செய்யப்படும் ஆவணங்களில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், அதன் விவரத்தைத் தெரிவித்து இணையவழியில் திருப்பி அனுப்பப்படும்.
குறைபாட்டை சரிசெய்து மீண்டும் பதிவேற்றம் செய்தால், மாவட்டப் பதிவாளரால் பரிசீலிக்கப்பட்டு மின்னணு கையெழுத்திட்ட சான்றிதழ் அனுப்பப்படும். இதன்மூலம், சங்கங்களைப் பதிவு செய்ய மாவட்டப் பதிவாளா் அலுவலகத்துக்கு நேரில் வர வேண்டிய அவசியம் இல்லை என்றுஅதில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மிதுன ராசிக்கு.. ! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10 2026) 12 ராசிகளுக்கும்! சாதகப்பலன் யாருக்கு?
சுற்றுலாத் துறை அமைச்சரின் தோ்தல் வெற்றி செல்லாது: காங்கிரஸ் அமைச்சருக்கு எதிராக தவெக வேட்பாளர் மனு!

உதகையில் குளிரின் தாக்கம் அதிகரிப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


