/

தமிழகத்தில் வழிபாட்டுத்தலங்களை திறப்பது பற்றி முடிவெடுக்கவில்லை: தமிழக அரசு

தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்களை திறப்பது பற்றி இதுவரை முடிவெடுக்கவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:46 pm

DIN


சென்னை: தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்களை திறப்பது பற்றி இதுவரை முடிவெடுக்கவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வழிபாட்டுத் தலங்களை திறக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில், தமிழகத்தில் இன்னும் வழிபாட்டுத் தலங்களை திறப்பது பற்றி முடிவெடுக்கவில்லை என்று பதிலளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாள்தோறும் கரோனா தொற்று உயர்ந்து வரும் நிலையில், வழிபாட்டுத் தலங்களை திறப்பது குறித்து முடிவெடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பரவலாக பெரும்பாலான வழிபாட்டுத் தலங்கள் இன்று, வழிகாட்டு நெறிமுறைகளோடு திறக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.